தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்துள்ள நிலையில் பொது இடங்களில் ஆவி பிடிப்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனாவிலிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள ஆவி பிடித்தல் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுவெளியில் ஆவி பிடிக்கும் எந்திரங்கள் வைக்கப்பட்டு ஆவி பிடிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர் பொது இடங்களில் ஆவி பிடிப்பது பாதுகாப்பானதல்ல என்றும், இதனால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.