Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொண்டாட்டத்தில் சந்திரயான் - 1 குழு: அப்படி என்ன நடந்தது??

கொண்டாட்டத்தில் சந்திரயான் - 1 குழு: அப்படி என்ன நடந்தது??
, செவ்வாய், 22 அக்டோபர் 2019 (16:12 IST)
சந்திரயான் - 1 விண்ணில் செலுத்தப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து விஞ்ஞானிகள் இதனை இன்று கொண்டாடி வருகின்றனர்.
 
நிலவை ஆய்வு செய்ய இந்தியாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட முதல் விண்கலம் சந்தரயான் 1. இந்நிலையில் இன்று சந்திரயான் 1 பின்னணியில் வேலை செய்த அனைத்து விஞ்ஞானிகள் அனைவரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஆம், சந்திரயான் 1 விண்ணில் ஏவப்பட்டு 11 வருடங்களை நிறைவு செய்ததையடுத்து இந்த கொண்டாட்டத்தில் விஞ்ஞானிகள் உள்ளனர். 
 
ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி11ஐ செயற்கைக்கோளை பயன்படுத்தி 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது சந்திரயான் 1. 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 வரை 312 நாட்களில் சந்திரயான் 1 நிலவை சுற்றி 3,400-க்கும் மேற்பட்ட சுற்றுப்பாதைகளை உருவாக்கியது. 
 
சந்திரயான் 1 திட்ட இயக்குனராக் இருந்த மயில்சாமி அண்ணாதுரை சந்திரயான் 1 விண்ணில் செலுத்தப்பட்ட போது வானிலை மோசமாக இருந்ததாகவும், இருப்பினும் சந்திரயான் 1 வெற்றியை சந்தித்தது என நினைவு கூர்ந்துள்ளார். 
 
இதே போல இந்த ஆண்டு நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்தரயான் 2, விக்ரம் லேண்டர் தொலைத்தொடர்பை இழந்தாலும், ஆர்பிட்டர் நல்ல முறையில் செயல்ப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாமதமாக வந்த தனியார் ரயில் – பயணிகளுக்கு இழப்பீடு !