Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தற்பாலின உறவால் பலியான இஸ்ரோ விஞ்ஞானி..

Advertiesment
தற்பாலின உறவால் பலியான இஸ்ரோ விஞ்ஞானி..

Arun Prasath

, சனி, 5 அக்டோபர் 2019 (11:56 IST)
தற்பாலின உறவு வைத்ததற்கு பணம் தராததால் தான் இஸ்ரோ விஞ்ஞானியை கொன்றதாக கொலையாளி ஒப்புகொண்டுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ், தான் வசித்துவந்த ஹைதராபாத் அமீர்பேட்டை அண்ணப்பூர்ணா குடியிருப்பில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனையடுத்து இந்த கொலை குறித்து விசாரித்து வந்த காவல்துறையினர், இது தொடர்பாக ஆய்வக உதவியாளர் ஸ்ரீனிவாஸ் என்பவரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து ஸ்ரீனிவாஸிடம் விசாரித்ததில்,  கொலைக்கான காரணம் என்னவென்று போலீஸாருக்கு தெரியவந்தது. ஸ்ரீனிவாஸ் ரத்த மாதிரிகளை சேகரிப்பதற்காக விஞ்ஞானி வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். இந்நிலையில் ஸ்ரீனிவாசனுடன் தற்பாலின உறவை எதிர்பார்த்த சுரேஷ், தன்னுடன் உறவு வைத்துக்கொண்டால் பணம் தருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் பல முறை தற்பாலின உறவில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சுரேஷ், ஸ்ரீனிவாஸுக்கு பேசியபடி பணம் தரவில்லை என தெரியவருகிறது. இதனால் தான் ஸ்ரீனிவாஸ் இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் சுரேஷின் வீட்டிலிருந்த மோதிரம், 10 ஆயிரம் ரூபாய் பணம், ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரண்மனையில் சொகுசாக வாழ்ந்த 344 வயது ’அலக்பா’ மரணம்!