சந்திரனை ஆய்வு செய்வதற்காக இந்தியா சந்திராயன் 1 என்ற செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது. தற்போது சந்திராயன் 2 என பெயரிடப்பட்டுள்ள இரண்டாவது செயற்கை கோளை விண்ணில் செலுத்த உள்ளது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் சந்திராயன் 2 ஹாலிவுட் படங்களை விட குறைவான செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இது குறித்த மேலும் தகவல்கள் பின்வருமாறு...
சந்திராயன் 1 செயற்கை கோள் 2013 ஆம் ஆண்டு வெளியான விண்வெளி தொடர்பான படமான Gravity-யை விட குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டதாம். Gravity படம் ரூ.644 கோடி செலவில் உருவானது. சந்தியாரன் 1 ரூ.470 கோடி செலவில் உருவானது.
இதே போல் சந்திராயன் 2, ரூ.800 கோடி செலவில் தயாராகியுள்ளதாம். இது Interstellar என்னும் ஹாலிவுட் படத்தின் பட்ஜெட்டை விட குறைவு. ஆம், Interstellar படம் ரூ.1062 கோடியில் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.