Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் பூ அல்ல.. விதை : ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த கமல்ஹாசன்

Advertiesment
நான் பூ அல்ல.. விதை : ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த கமல்ஹாசன்
, செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (17:40 IST)
காகிதப் பூக்கள் மலராது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு நடிகர் கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

 
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ளனர். அதுவும், தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை நாளை கமல்ஹாசன், ராமேஸ்வரத்தில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டில் அறிவிக்கவுள்ளார்.
 
இந்நிலையில் இன்று மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “பருவநிலை மாறும் போது சில பூக்கள் மலரும். பின் உதிர்ந்து விடும். திமுக என்ற பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
நாளை காலை கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை அறிவிக்கவுள்ள நிலையில், காகிதப் புக்கள் மணக்காது என ஸ்டாலின் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் கமல்ஹாசனிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அவர் “நான் பூ அல்ல! விதை! என்னை முகர்ந்து பார்க்காதீர்கள், விதைத்து பாருங்கள்.. வளர்வேன்..” என அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீடியோ கால் பேசியவாறு தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவி