Publish Date: Mon, 19 Feb 2024 (07:20 IST)
Updated Date: Mon, 19 Feb 2024 (07:22 IST)
பாஜகவை சேர்ந்த மனோஜ் சோன்கர் என்பவர் சண்டிகர் மேயராக தேர்வு செய்யப்பட்ட விதம் சர்ச்சையை கிளப்பியதாக குற்றச்சாட்டப்பட்ட நிலையில் சண்டிகர் மாநகராட்சி மேயர் பதவியை மனோஜ் சோன்கர் திடீரென ராஜினாமா செய்தார்
சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டுகளை தேர்தல் நடத்தும் அதிகாரி திருத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியிருந்த நிலையில் இந்த தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த தேர்தல் வழக்கு குறித்த விசாரணையின்போது இப்படியா தேர்தல் நடத்துவது? என சண்டிகர் மேயர் தேர்தலை நடத்திய அதிகாரிக்கு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
மேலும் அவர் தேர்தல் அதிகாரி வாக்குச் சீட்டுகளை திருத்தியுள்ளது வெளிப்படையாக தெரிகிறது என்றும், இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்றும், இது ஜனநாயக படுகொலை என்றும், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.