Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரான் குறித்து ஆய்வு: சென்னை வருகிறது மத்திய குழு!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (07:59 IST)
ஒமிக்ரான் வைரஸ் குறித்து ஆய்வு செய்ய மத்திய ஆய்வுக்குழு சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் இதனை அடுத்து மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழகம் உள்பட ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய ஆய்வுக்குழு அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று சென்னைக்கு மத்திய சுகாதாரத் துறையை சேர்ந்த வல்லுனர்கள் குழு வருகை தந்து உள்ளது என்றும் அவர்கள் இன்று சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
 
தமிழ்நாட்டிற்கு வந்த ஆய்வுக்குழு மூன்று நாட்கள் தங்கியிருந்து தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஒமிக்ரான் தொற்றுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்வார்கள் என்று கூறப்படுகிறது
 
மேலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் அவர்கள் விளக்கம் அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது அதன்பின்னர் மத்திய அரசிடம் சென்று அவர்கள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

குண்டு வைத்து கொல்லப் போறோம்.. பணம் குடுத்தா விட்ருவோம்! - எஸ்.பி.வேலுமணிக்கு வந்த கொலை மிரட்டல்!

மைசூர் பாக்ல கூட ‘PAK’ வரக்கூடாது! மைசூர் ஸ்ரீ என பெயர் மாற்றிய ஸ்வீட் கடைகள்!

8 மாவட்டங்களுக்கு காத்திருக்குது கனமழை! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments