அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் இறந்து போனதால் கிறிஸ்துமஸ்க்கு குறைவான கிறிஸ்துமஸ் தாத்தாக்களே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிறிஸ்துமஸை முன்னிட்டு அமெரிக்காவில் தன்னார்வலர்கள் பலரும் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் வேஷம் போட்டு குழந்தைகளுக்கு பரிசுகள் அளிப்பது ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அமெரிக்காவில் ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் வேஷம் போட்ட பலருக்கு ஒமிக்ரான் பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.
அமெரிக்காவின் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் சர்வதேச சகோதரத்துவ அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் ஒமிக்ரான் பாதிப்பால் 55 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைவான அளவில் கிறிஸ்துமஸ் தாத்தாக்களே நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசளித்துள்ளனர்.