Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊழியர்களுக்கு ஒமிக்ரான்; விமானங்கள் ரத்து! – காற்று வாங்கும் விமான நிலையங்கள்!

ஊழியர்களுக்கு ஒமிக்ரான்; விமானங்கள் ரத்து! – காற்று வாங்கும் விமான நிலையங்கள்!
, ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (11:57 IST)
அமெரிக்காவில் விமான ஊழியர்களுக்கு ஒமிக்ரான் உறுதியானதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.

முக்கியமாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்த நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மற்ற நாடுகளிலும் தீவிர பரிசோதனை, தனிமைப்படுத்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகின்றன.

அமெரிக்காவில் பைலட், விமான சிப்பந்தி உள்ளிட்ட விமான ஊழியர்கள் பலருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவிலும் இதே நிலை தொடர்கிறது. இதனால் பயணிகள் விமான சேவை பெற முடியாமல் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. விமான நிறுவனங்களும் மாற்று ஊழியர்கள் கிடைக்காமல் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

422 ஆக அதிகரித்த ஒமிக்ரான் பாதிப்பு; மகாராஷ்டிரா முதலிடம்! – இந்திய நிலவரம்!