Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்!

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்!

J.Durai

, வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (14:31 IST)
மத்திய அரசு குற்றவியல் நடைமுறை சட்டங்களின் பெயர்களை சமஸ்கிருதத்தில் மாற்றியதுடன், அச்சட்டங்களில் பல்வேறு மாற்றங்களை செய்து நாடாளுமன்றத்தில் விவாதம் ஏதும் இன்றி நிறைவேற்றியது.
 
இதற்கு எதிர்க்கட்சிகள் வக்கீல்கள் உட்பட அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதைத்தொடர்ந்து ஒன்றிய அரசு அதிகம் அறிமுகம் செய்த கருப்பு சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி நாடு முழுவதிலும் வக்கீல்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
 
தமிழ்நாடு வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பு ஜாக் அமைப்பின் கீழ் திரண்ட வக்கீல் சங்கங்கள் திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
 
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வக்கீல் சங்கங்களும் இணைந்து ஜாக் அமைப்பின் கீழ் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் அறப்போராட்டம் நடத்தினர். 
 
இதையடுத்து திருவண்ணாமலையில் நடந்த ஜாக் அமைப்பின் அவசரக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட கோட்டுகள் முன்னதாக ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது அதன்படி நேற்று திருச்சி வக்கீல் சங்கம் சார்பில் நீதிமன்றம் வாயில் முன்பாக திருச்சி  வக்கீல்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
 
போராட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மேஜிஸ்ட்ரேட் கோர்ட் வக்கீல் சங்க தலைவர் முல்லை சுரேஷ் முன்னிலை வகுத்தார். போராட்டத்தில்மூத்த வக்கீல்கள்  பலர் கலந்து கொண்டனர். 
 
இந்த புதிய  சட்டங்களை மத்தியஅரசு திரும்பப்பெறும் வரை போராட்டம் ஓயாது என வக்கீல்கள் முழக்கமிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் இல்லை - அமைச்சர் மா.சுப்ரமணியன்!