Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1700 பேரை கொன்று குவித்த புலிகள், யானைகள்!? – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (11:21 IST)
இந்தியாவில் மனிதர்கள் வாழும் பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டத்தால் 1700க்கும் அதிகமானோர் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களிலும் வனப்பகுதிகள் உள்ள நிலையில், அந்த வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட பல காட்டு விலங்குகளும் வசித்து வருகின்றன. சில சமயங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் இந்த விலங்குகள் நுழைவதும் அதனால் உயிர் பலி ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

இவ்வாறான மனித பலிகளுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. முக்கியமாக வனப்பகுதிகளை அழித்தல், நகரமயமாக்கலால் வனப்பகுதிகள் மக்கள் வாழும் பகுதிகளாக மாற்றப்படுவது, யானைகளின் வழித்தடங்களில் வாழ்விடங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் வன விலங்குகள் தாக்கி நாடு முழுவதும் 1700க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக இந்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவற்றில் அதிகமான மனிதர்கள் இறந்தது புலிகள் மற்றும் யானைகளின் தாக்குதலால் என கூறப்பட்டுள்ளது.

அதுபோல மனிதர்கள் நடத்திய வேட்டைகளால் 230க்கும் அதிகமான யானைகளும், புலிகளும் மடிந்துள்ளன. மனிதன் – விலங்கு நடுவே ஏற்படும் இந்த எதிர்கொள்ளலை சமாளிக்க மத்திய, மாநில வனத்துறைகள் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக தலையிடுங்கள்..! ஜனாதிபதிக்கு, முன்னாள் நீதிபதிகள் கடிதம்..!!

ஆயிரக்கணக்கான கிலோ இனிப்புகளை ஆர்டர் செய்த காங்கிரஸ்.. எந்த நம்பிக்கையில்?

TN Lok Sabha Election result 2024 Live: மக்களவை தேர்தல் முடிவுகள் 2024 நேரலை

பெண்ணிடம் திருட முயற்சி செய்த திருடன்.. பெண் சுதாரித்ததால் திருடனுக்கு படுகாயம்..

முல்லைப்பெரியாரில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசைக் கண்டித்து மதுரையில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments