Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மளிகை கடையை சூறையாடிய காட்டுயானைகள்

Advertiesment
மளிகை கடையை சூறையாடிய காட்டுயானைகள்
, திங்கள், 2 மே 2022 (16:45 IST)
கோவை மாவட்டம் பெரிய தடாகத்தில்  குடியிருப்புப் பகுதியில்  புகுந்து, மளிகைக் கடையின் ஷட்டரை உடைத்து உணவுப்பொருட்களை யானைகள் தின்னும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதி தற்போது கோடைகாலத்தில் வறட்சியாக உள்ளன.

அதை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யாததால்,   நீரோடைகள், அருவிகளில் தண்ணீரின்றி காட்சியளிக்கின்றன.

இதனால் உணவின்றி தவித்துவரும் காட்டுயானைகள் அருகிலுள்ள கிராமத்திற்கு படையெடுத்து வருகின்றன. பெரிய தடாகம் பகுதியில் உள்ள 7 யானைகள் காட்டை விட்டு வெறியேறியுள்ள நிலையில், இன்று அதிகாலையில் தண்ணீர் பந்தல் பகுதிக்குச் சென்றன. அ ன்குள்ள மளிகை கடனையை உடைத்த 3 யானைகள் அதில் உள்ள அரிசிகள் , பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களைச் சாப்பிட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், காட்டுயானைகளை விரட்டினர். யானைகள் வரலால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷவர்மா சாப்பிட்டு மாணவி பலி: அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட உத்தரவு