ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட உள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற விதிமுறைகள் உள்ளன. இதில் இருசக்கர வாகனங்களுக்கு லைசென்ஸ் பெற எட்டு போட்டு காட்டுதல் போல வாகனங்களுக்கும் விதிகள் உள்ளன. இந்நிலையில் இந்த விதிகளை மேலும் கடுமையாக்கப் போவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் எழுந்த கேள்விக்கு பதிலளித்த நிதின் கட்கரி “ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான விதிகள் கடுமையாக்கப்படும். இனி ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான தகுதி மதிப்பெண் 69க்கும் மேல் இருக்க வேண்டும். ஓட்டுனருக்கான தகுதியை சோதிக்க அனைவரும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதுபோல வாகனங்களில் ரிவர்ஸ் கியர் இருந்தால் வாகனத்தை ரிவர்ஸில் சரியாக இயக்கவும், வலது இடது சரியாக வளைக்கவும் துல்லியமாக தெரிந்திருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.