Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் போடப்படுமா?!.. மத்திய அரசு சொல்வது என்ன?...

Advertiesment
lockdown
ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பல பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக எரிபொருள் உற்பத்தி நடக்கவில்லை. அதனால், எரிவாயு கிடைக்காததால் இந்தியாவில் பல மாநிலங்களிலும் சமையல் சிலிண்டர் கிடைக்காமல் பல ஹோட்டல்களும், உணவுகளும் மூடப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது..

எப்படியும் விரைவில் போர் முடிவுக்கு வந்துவிடும் என பொதுமக்கள் எதிர்பார்த்தாலும் அது நடப்பது போல் தெரியவில்லை. தமிழ்நாட்டில் கூட பல உணவுகள் மூடப்பட்டிருக்கிறது. திறக்கப்பட்டிருக்கும் உணவுகளில் விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் பலரின் வேலை வாய்ப்பும் பாதித்திருக்கிறது. இதையடுத்து கடந்த சில நாட்களாகவே கொரோனா காலத்தில் ஊரடங்கு போட்டது போல இந்த முறையும் ஊரடங்கை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது..

இந்நிலையில், இந்த தகவலை மத்திய அரசு மறுத்திருக்கிறது.. இது தொடர்பாக மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கொடுத்துள்ள விளக்கத்தில் ‘லாக்டவுன் போடப்படும் என வெளியாகும் செய்தி முற்றிலும் தவறானவை.. மத்திய அரசிடம் இதுபோல எந்த திட்டமும் இல்லை..

தற்போதைய சூழலில் எல்லோரும் பொறுமையுடனும், பொறுப்புடனும், ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.. எரிபொருள் வினியோகம் தடையில்லாமல் நடக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பாஜக அரசு எடுத்து வருகிறது.. சவாலான சூழ்நிலையை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம நவமி தினத்தில் 36 வருடங்களுக்கு பின் திறக்கப்பட்ட இந்து கோவில்.. உள்ளூர் முஸ்லீம்கள் வாழ்த்து..!