Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீ டூ விவகாரம் - விசாரணைக்குழு அமைக்கும் மத்திய அரசு

Advertiesment
மீ டூ விவகாரம் - விசாரணைக்குழு அமைக்கும் மத்திய அரசு
, வெள்ளி, 12 அக்டோபர் 2018 (16:18 IST)
நாடெங்கும் பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக பேச முன் வந்துள்ளதால், அந்த புகார்களை குழு அமைத்து விசாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 
சமீபகாலமாக #Metoo மற்றும் #Metooindia என்கிற ஹேஷ்டேக்கில் நடிகைகள், பெண் பத்திரிக்கையாளர்கள் உட்பட பலரும் தாங்கள் வாழ்வில் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக பேசி வருகின்றனர். பாலியல் நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார். அவரைத் தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத், இயக்குனர் விகாஸ் மீது புகார் தெரிவித்தார். அவர்களை தொடர்ந்து பாலிவுட்டில் பல பெண்கள், சினிமா பிரபலங்கள் மீது தைரியமாக புகார் கூறி வருகின்றனர். சினிமா துறை மட்டுமில்லாமல், மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பரும் இதில் சிக்கியுள்ளார்.
 
அதேபோல், பாடகி சின்மயி பிரபல யூடியூப் சினிமா விமர்சகர் பிரசாந்த் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் மீது பாலியல் புகார் கூறினார். தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து சின்மயி பேச தொடங்கியதை அடுத்து, பல்வேறு துறையில் உள்ள பல பெண்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து அவரிடம் தெரிவித்து வருகின்றனர். அதை அவர் அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
 
இந்த விவகாரம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, #MeToo மூலம் வெளியாகும் புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு குழு அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நீதித்துறையினர் மற்றும் சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதோ பாருங்க...உலகில் அதிக அளவில் கிண்டல் செய்யப்படும் நபர் யாருண்ணு தெரியுமா...?