Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் தப்பு செய்யாதவன் என என் குழந்தைகள் நம்புகிறார்கள்: சுசி கணேசன்

Advertiesment
susi ganesan
, வியாழன், 18 அக்டோபர் 2018 (11:09 IST)
இயக்குநர் சுசி கணேசன் மீது ஆவணப்பட இயக்குனரும், கவிஞருமான லீனா மணிமேகலை பாலியல் அத்துமீறல் புகார் கூறியிருந்தார். 
இதனை மறுத்துள்ள சுசி கணேசன், லீனா மணிமேகலை மீது மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாக அறிவித்தார்.இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: 
 
  
லீலா மணிமேகலையின் பொய்யான புகாரால், கூனிக்குறுகி நிற்கிறேன். என் வீடு கடந்த 3 நாட்களாக துக்க வீடு போல் உள்ளது. உண்மையை உரக்கச் சொல்ல முடிவு செய்து இங்கு வந்துள்ளேன்.
 
லீலா மணிமேகலை மீது மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். இப்போது, நான் தப்பு செய்யாதவன் என்று என் குழந்தைகள் நம்புகிறார்கள். அந்த நிம்மதிதான் என்னை இயங்க வைத்திருக்கிறது. நாளை..எங்கள் அப்பா நல்லவர் என்று என் குழந்தைகள் எல்லோருக்கும் சொல்லவேண்டும். அதற்காகத்தான் இந்த விளக்கம். கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்வேன். நான் கடவுள் பக்தி கொண்டவன் . சத்தியம் வெல்லும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு சுசி கணேசன் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'சீதகாதி' செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு