மத்திய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது புதிய திட்டத்தையும் அமல்படுத்த ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் ஏர் இந்தியாவை வாங்க தனியார் நிறுவனங்கள் முன் வராத சூழலில் மேலும் சில சலுகைகளையும் மத்திய அரசு அறிவித்து வருகிறது.
முன்னதாக ஏர் இந்தியாவின் கடன் 62 கோடியில் இருந்து 23 கோடியாக குறைக்கப்பட்டது. பிறகு ஏர் இந்தியாவுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தையும் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் நிறுவனங்களை ஈர்க்க அடிப்படை சந்தை மதிப்பு விற்பனைக்கு பதிலாக, தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் ஏலம் கோர நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.