Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

55 லட்சத்தை கடந்தது கொரொனா பாதிப்புகள் – இந்திய நிலவரம்!

55 லட்சத்தை கடந்தது கொரொனா பாதிப்புகள் – இந்திய நிலவரம்!
, செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (10:28 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் 55 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 75,083 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 55,62,663 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1,053 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 88,935 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44,97,867 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 9,75,861 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாராஷ்டிரா கட்டிட விபத்து... பலி எண்ணிக்கை 20-தை தொட்டது!