Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? தேதிகள் அறிவிப்பு!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (07:53 IST)
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது

 நடப்பு கல்வி ஆண்டுக்கான சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்குகிறது என்றும் இந்த தேர்வு மார்ச் 13ஆம் தேதி நிறைவடைகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு பொது தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ஆம் தேதி நிறைவடைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஜே.ஈ.ஈ. உள்ளிட்ட தேர்வுகளை கருத்தில் கொண்டு சிபிஎஸ்சி தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்வு அட்டவணை குறித்த முழு விவரங்களை cbse.nic.in , cbse.gov.in இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் மார்ச் மாதத்திற்குள் அனைத்து தேர்வுகளையும் முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிவினையைத் தூண்டும் வகையில் நவாஸ் கனி செயல்படுகிறார். அண்ணாமலை குற்றச்சாட்டு..

விவேக் ராமசாமி சதி செய்து விரட்டப்பட்டாரா? எலான் பார்த்த உள்ளடி வேலையா?

சீக்கிரமே துணை முதல்வர் உதயநிதி ஜெயிலுக்கு போவார்: எச். ராஜா

ஓடும் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி.. பரிதாபமாக பலியான 8 பயணிகள்..!

2வது மாடியில் இருந்து கீழே விழுந்த கார்.. ரிவர்ஸ் கியர் போடும்போது விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments