கனடா நாட்டிற்கு வரும் சர்வதேச மாணவர்களுக்கான வாழ்க்கைச் செலவு நிதித் தேவையை இரட்டிப்பாக்கி, அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	கனடா நாட்டிற்கு வரும் மாணவர்களின் வாழ்க்கைச் செலவு நிதித் தேவையை இரட்டிப்பாக்கி அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது இது சர்வதேச நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
									
										
			        							
								
																	உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கனடா நாட்டிற்கு படிக்கச் செல்கின்றனர். இந்த நிலையில், கனடா நாட்டிற்கு வரும் சர்வதேச மாணவர்களுக்கான வாழ்க்கைச் செலவு நிதித் தேவையை இரட்டிப்பாக்கி, அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
 
									
											
							                     
							
							
			        							
								
																	இந்த புதிய அறிவிப்பு வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. இது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் வருகையைப் பாதிக்கும் என கூறப்படுகிறது.
 
									
			                     
							
							
			        							
								
																	அதன்படி, பல ஆண்டுகளாக 10 ஆயிரம் டாலராக இருந்த வாழ்க்கைச் செலவு தொகை ஜனவரி 1 முதல் 20 635 டாலர்களுக்கான வைப்பு கணக்கை மாணவர்கள் காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.