டெல்லியில் கடந்த புத்தாண்டு தினத்தில் அஞ்சலி என்ற பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது கார் ஒன்று அவர் மீது மோதி 12 கிலோமீட்டர் வரை அவரை இழுத்துச் சென்றது. அந்த பெண் பரிதாபமாக பலியான நிலையில் இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிருஷ்ணன், மிதுன், மனோஜ் மிட்டல் ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர். இதில் தீபக் தான் காரை ஓட்டி வந்ததாக முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது விசாரணையில் காரை ஓட்டியது தீபக் அல்ல என்றும் அவர் காரிலேயே இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
காரை ஓட்டியது அமீத் கண்ணா என்றும் அவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாததால் தீபக் என்ற ஒருவரை செட்டப் செய்து காவல் துறையில் தான் காரை ஓட்டியதாக சொல்ல சொன்னதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீபக்கின் செல்போன் விவரங்கள் ஆய்வு செய்தபோது அவர் அன்றைய தினம் முழுவதும் அவர் வீட்டிலேயே இருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார் டிரைவர் மாற்றிய மற்ற நான்கு பேர்கள் மீது கடும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.