பிரபல இந்திய தொழிலதிபரின் குரலை ஏஐ மூலம் மூலம் மாற்றி மோசடி செய்ய முயற்சித்ததாக, அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் சுனில் மிட்டல் என்பதும், இவர் சமீபத்தில் ஊடக நிறுவன நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டபோது கூறிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது:
ஏஐ தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி, மோசடியாளர்கள் மோசடி செய்ய பலநேரம் முயற்சிக்கின்றனர், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதும் அவசியம் என்றும் அவர் அந்த நிகழ்வில் தெரிவித்தார்.
"ஏனெனில், என்னுடைய குரலை ஏஐ மூலம் உருவாக்கி துபாயில் உள்ள எனது அலுவலகப் பிரதிநிதியை மோசடி செய்ய முயற்சித்தார்கள். ஒரு பெரிய தொகையை ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும் என்னுடைய குரலில் மோசடியாளர்கள் பேசியதாகவும். ஆனால் எங்களது பிரதிநிதி விழிப்புடன் செயல்பட்டு அதை என்னிடம் உறுதி செய்ய அழைத்தபோது,அதை நான் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன்," என்றும், "அந்த குரல் அப்படியே நான் பேசுவது போலவே இருந்தது," என்றும் அவர் குறிப்பிட்டார்.
"வரும் நாட்களில் இவ்வகை மோசடி அதிகரிக்கும் நிலையில், நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்," என்றும், "ஏஐ தொழில்நுட்பத்தினால் ஏற்படும் தீமையிலிருந்து சமூகத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை," என்றும், அதே சமயத்தில் ஏஐ மூலம் கிடைக்கும் நன்மையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார். அவருடைய இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.