இளம் பெண்ணிடம் ஒரே ஒரு வீடியோ கால் பேசிய தொழில் அதிபர் 2.5 கோடி ரூபாய் ஏமாந்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	 தற்போதைய இன்டர்நெட் உலகில் புதுப்புது வகையான மோசடிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மோசடி கும்பலிடம் வியாபாரிகள், தொழிலதிபர்கள் உள்பட பலரும் சிக்கி, பணத்தை ஏமாந்து வருகின்றனர்.
 
									
										
			        							
								
																	அந்த வகையில், தொழிலதிபர் ஒருவருக்கு கொல்லம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமாகியுள்ளார். தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி அறிமுகமான அவர், தொழிலதிபரிடம் அவ்வப்போது செல்போனில் பேசி வந்துள்ளார். மேலும், வீடியோ கால் மூலம் தனது உடலை நிர்வாணமாக காண்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் தொழிலதிபரிடம் இருந்து நகைகள் மற்றும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும் பெற்றுள்ளார்.
 
									
											
									
			        							
								
																	அதற்குப் பிறகு, அந்த தொழிலதிபரிடம் தொடர்ந்து மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதனால் தொழிலதிபர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் அந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஷெமி என்பதும், அவருக்கு உடந்தையாக அவரது கணவரும் இருந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
 
									
			                     
							
							
			        							
								
																	மேலும், தொழிலதிபரிடம் இருந்து பறித்த பணத்தை வைத்து, அந்த பெண் சொகுசு கார், ஆடம்பர பங்களா, தங்க நகைகள் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளார். அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களை விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.