வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவாக இருக்கும் வளிமண்டல காற்றழுத்த மண்டலம் காரணமாக தமிழகத்தில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
அதுபோல், கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் 4ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை கேரளாவில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல், தமிழகத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரை கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.