நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். எதிர்பார்த்தது போலவே இதில் எந்த விதமான பரபரப்பான அறிவிப்பு வெளியாகவில்லை என்பதை பார்த்தோம்.
குறிப்பாக வருமானவரி முறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ஒரு கோடி வீடுகளில் சூரிய மின்சார திட்டம் வழங்கப்படும் என்றும் பத்து ஆண்டுகளில் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
மேலும் இது இரண்டு மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய அறிவிப்பு எதுவும் இருக்காது என்று எதிர்பார்த்த மாதிரியே தான் பட்ஜெட் உரை தற்போது முடிவடைந்து உள்ளது.
இந்த நிலையில் சற்றுமுன் பட்ஜெட் தாக்கல் செய்யும் பணி நிறைவு பெற்றதாகவும் இதனை அடுத்து நாளை காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை நாடாளுமன்றம் கூடியதும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.