Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்..! விமான நிலையம் 149-ஆக உயர்வு..!

Advertiesment
budjet

Senthil Velan

, வியாழன், 1 பிப்ரவரி 2024 (11:55 IST)
மீன்வளத் துறையில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
 
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
 
தொடர்ந்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார். பத்து ஆண்டுகளில் கடல் உணவு ஏற்றுமதியில் இரு மடங்கு வளர்ச்சி உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 
நாடு முழுதும் புதிய விமான நிலையங்களை விரிவாக்கம் செய்யும் திட்டம் தொடரும் என தெரிவித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், விமான நிலையங்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இடைக்கால பட்ஜெட் 2024: நேரலை! Interim Budget 2024: Live Updates!