Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம்.. பட்ஜெட்டில் அறிவித்த நிர்மலா சீதாராமன்

tata solar

Mahendran

, வியாழன், 1 பிப்ரவரி 2024 (11:39 IST)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை வாசித்து வரும் நிலையில் ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
 
நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும், ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும்
 
இந்தியாவில் செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை 80-ஆக அதிகரித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சி இருக்கும், அதேபோல் அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்படும். அதில் ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும்
 
நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்தபோது ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். தற்போது நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. மகளிர் இட ஒதுக்கீடு, முத்தாக் தடை போன்ற பெண்களுக்கான சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது
 
கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் தடுமாறிய நிலையில், இந்தியா சிறப்பாக கையாண்டது. வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு 2027-ல் நனவாகும் என்றும்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள்: பட்ஜெட் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன்..!