பிஎஸ்என்எல் தரும் தீபாவளி போனஸ்.. 1 ரூபாயில் பிரிபெய்டு திட்டம்.. 30 நாள் வேலிடிட்டி.. தினம் 2ஜிபி டேட்டா..!

Mahendran
வியாழன், 16 அக்டோபர் 2025 (11:24 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் 'தீபாவளி போனான்ஸா' என்ற பெயரில், வெறும் ரூ. 1 செலவில் ஒரு புதிய விளம்பர ப்ரீபெய்டு திட்டத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்து பிஎஸ்என்எல் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 
இந்த 'புதிய ப்ரீபெய்டு விளம்பர திட்டத்தின்' கீழ், புதிய வாடிக்கையாளர்கள் ரூ. 1 மட்டும் செலவிட்டு 30 நாட்களுக்கு இந்த சலுகையைப் பெறலாம். இதில், அவர்களுக்கு வரம்பற்ற அழைப்புகள், தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் 100 குறுஞ்செய்திகள் ஆகியவை கிடைக்கும்.
 
இந்த சலுகை அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். மேலும், மொபைல் எண் போர்ட்டபிளிட்டி மூலம் பிஎஸ்என்எல் இணைப்புக்கு மாறும் வாடிக்கையாளர்களும் இந்த சலுகையைப் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

துபாயில் படித்த 18 வயது இந்திய மாணவர் திடீர் மரணம்.. இந்த சின்ன வயதில் மாரடைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments