உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் 50 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், 5 பேர் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா என்ற ஒரு உயரமான கிராமம் உள்ளது. இந்த கிராமம், பத்ரிநாத்திலிருந்து சுமார் 3.2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வழக்கமாக, இங்கு அதிக அளவில் பனிப்பொழிவு காணப்படும்.
இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட பனிப்பொழிவால், மனா கிராமம் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு தங்கி இருந்த 57 தொழிலாளர்கள் பனிச்சரிவில் புதைந்ததாகவும், இதனால் பெரும் பதற்றம் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
தகவல் கிடைத்ததும், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 16 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடைசியாக வந்த தகவலின்படி, 57 தொழிலாளர்கள் பனிச்சரிவில் சிக்கிய நிலையில், 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், ஐந்து பேர் இன்னும் காணவில்லை என கூறப்படுகிறது.