இந்திய விமானப்படைக்காக போயிங் நிறுவனத்திடம் கேட்கப்பட்ட போர் விமானங்கள் தயாராகி விட்டதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட சீன் – இந்திய மோதலுக்கு பிறகு இந்திய ராணுவத்தை பலப்படுத்தும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. முன்னதாக இந்திய விமானப்படையை மேம்படுத்த விமானப்படை சார்பில் ரஷ்யாவின் மிக் ரக விமானங்கள் உள்ளிட்டவற்றை வாங்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி போர் விமானங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்க மத்திய அரசு நிதி ஒதுக்கியது.
முன்னதாகவே அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் அதிநவீன அபாச்சே ஹெலிகாப்டர்கள் மற்றும் சிணூக் ரக பெரிய சாப்பர்கள் வாங்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி தயாரிக்கப்பட்டு வந்த போர் ஹெலிகாப்டர்கள் தயாரிப்பு வெற்றிகரமாக முடிந்து விட்டதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய கொடி அச்சிடப்பட்ட அபாச்சே மற்றும் சிணூக் ஹெலிகாப்டரின் புகைப்படங்களை பதிவிட்டு, கொள்முதல் செய்ததற்கு இந்தியாவிற்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது போயிங் இந்தியா நிறுவனம்.