கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளை நடத்த தொடர்ந்து பல நாடுகள் இந்தியாவிற்கு அழைப்பு விடுத்து வருகின்றன.
கடந்த மார்ச் மாதம் தொடங்கவிருந்த ஐபிஎல் டி20 போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக ஏப்ரல் 15க்கு ஒத்திவைக்கப்பட்டன. ஆனால் நிலவரம் தீவிரமடைந்து வருவதால் இதுவரை ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாமலே உள்ளன. அதேசமயம் வேறு நாடுகளில் ஐபிஎல் நடத்துவது, பார்வையாளர்கள் இல்லாத போட்டியாக நடத்துவது குறித்தும் பிசிசிஐ ஆலோசித்து வந்தது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அரபு அமீரகம், இலங்கை உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தன. ஆனால் இப்போதிருக்கும் பாதுகாப்பற்ற சூழலில் அதற்கு சாத்தியமில்லை என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர் ஐபிஎல் போட்டிகளை நடத்த நியூஸிலாந்தும் அழைப்பு விடுத்ததாக தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பூக் என்பவர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் அதில், ஐபில் தொடரை நியூசிலாந்து நாடு நடத்துவதாக செய்திகள் வெளியாகிறது ஆனால் உண்மையில் இந்த செய்தியை நாங்க தெரிவிக்கவில்லை என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.