டெல்லியின் வரலாற்று மற்றும் கலாச்சார வேர்களை பிரதிபலிக்கும் விதமாக, தலைநகரின் பெயரை பாண்டவர்களால் நிறுவப்பட்ட 'இந்திரபிரஸ்தா' என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று டெல்லி பா.ஜ.க. எம்.பி. பிரவீன் கண்டேல்வால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	டெல்லிக்கு மட்டுமின்றி, பழைய டெல்லி ரயில் நிலையம் மற்றும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றுக்கும் 'இந்திரபிரஸ்தா சந்திப்பு' மற்றும் 'இந்திரபிரஸ்தா விமான நிலையம்' என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
									
										
			        							
								
																	
	 
	பிரதமர் மோடியின் கலாச்சார மறுமலர்ச்சி திட்டத்தின்படி, அயோத்தி போன்ற நகரங்கள் பழம்பெயரை மீட்டெடுக்கும்போது, டெல்லிக்கும் இந்த பெயர் மாற்றம் அவசியமானது என்று கண்டேல்வால் வாதிட்டுள்ளார். 
 
									
											
									
			        							
								
																	
	 
	இந்தப் பெயர் மாற்றம், வரலாற்று நீதியுடன், தர்மம் மற்றும் தேசியவாதத்தின் சின்னமாகவும் அமையும் என்றும், அங்குப் பாண்டவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	முன்னதாக, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பும் இதேபோன்ற கோரிக்கையை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.