டெல்லி முதல்வரை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி ஒருவரும் ரூபாய் நோட்டுகள் குறித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்திய அரசின் ரூபாய் தாள்களில் பல ஆண்டுகளாகவே மகாத்மா காந்தியின் படம் அச்சிடப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற நாடுகளை போல ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் வேறு வேறு தலைவர்கள் படங்களை அச்சிட வேண்டும் போன்ற கருத்துகளும் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றது.
இந்நிலையில் சமீபத்தில் ரூபாய் நோட்டுகள் பத்தி பேசிய ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், ரூபாய் தாள்களில் லெட்சுமி உள்ளிட்ட இந்து கடவுளர்களின் படத்தை அச்சிடலாம் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து தற்போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற எம்.பி மணீஷ் திவாரி, ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் காந்தி படமும், மற்றொரு பக்கம் அம்பேத்கார் படமும் அச்சிட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். சமத்துவம் பற்றி பேசிய நவீன இந்தியாவின் ஆளுமையான அம்பேத்கார் படத்தை ஏன் ரூபாய் நோட்டுகளில் அச்சிடக்கூடாது என கேள்வியெழுப்பியுள்ளார்.
தொடர்ந்து ரூபாய் நோட்டுகளில் படங்கள் அச்சிடுவது குறித்து பலரும் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.