Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

#Balatkari Janatha Party: பாஜகவிற்கு வெட்க கேடு...

Advertiesment
ஆஷிபா
, சனி, 14 ஏப்ரல் 2018 (12:36 IST)
ஜம்மு காஷ்மீரில் கத்துவா பகுதியில், 8 வயது சிறுமி ஆஷிபா பாலையல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, சமூக வலைத்தளங்களில் #JusticeforAsifa என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.
 
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர், பாஜக கட்சியிலும், ஆர்எஸ்எஸ், ஹிந்துத்துவா அமைப்பிலும் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த கொடூர சம்பவம் வெளியவதற்கு முன்னர் உத்திர பிரதேச மாநிலத்தில் 17 வயது இளம்பெண் பாஜக எம்பியால் பலாத்காரம் செய்யப்பட்டு, அந்த சிறுமியின் தந்தை கொல்லப்பட்டது சர்சையை ஏற்படுத்தியது. 
webdunia
இந்நிலையில், கேரள மாநிலத்தில் இதற்கான போராட்டங்கள் அதிக அளவில் உள்ளது. வீட்டு வாசலில், என் வீட்டில் 10 வயது சிறுமி உள்ளாள் பாஜகவினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம் என வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. 
 
இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, Bharatiya Janata Party என்ற பிஜேபியின் விரிவாக்கத்தை Balatkari Janatha Party என மாற்றி, #BalatkariJanathaParty என்ற ஹேஷ்கேட் உருவாக்கப்பட்டுள்ளது. இது தேசத்தை ஆளும் கட்சிக்கு பெரும் வெட்க கேடாக உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்பேத்கர் சிலை உடைப்பு: டெல்லியில் பரபரப்பு!