Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை? மத்திய அமைச்சரின் அதிரடி நடவடிக்கை

Advertiesment
பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை? மத்திய அமைச்சரின் அதிரடி நடவடிக்கை
, சனி, 14 ஏப்ரல் 2018 (10:30 IST)
நாட்டில் பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து அவருகிறது. அதுவும் குறிப்பாக குழந்தை வன்கொடுமை அதிகளவில் உள்ளது. பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க மசோதா நிறைவேற்றப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் மேனகா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பல நாட்கள் பட்டினி போட்டு, மயக்க மருந்து கொடுத்து, தொடர்ந்து பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் போலீஸாரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பலாத்கார சம்பவத்திற்கு எதிராக நாடே கொந்தளித்துள்ளது.
webdunia
இதுகுறித்து பேசிய மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா  பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்போவதாகவும்,  12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்க வழிவகை செய்யும் வகையில் சட்ட மசோதா கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுத்தால் தான் இனி இதுபோன்று எந்த தவறும் நடக்காது என மேனகா தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் முன் 7 பெண்கள் தீக்குளிக்க முயற்சி: மதுரையில் பரபரப்பு