Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் குழந்தை இருக்கிறாள்...உள்ளே வர வேண்டாம் : பாஜகவிற்கு எதிராக நெட்டிசன்கள்

Advertiesment
பெண் குழந்தை இருக்கிறாள்...உள்ளே வர வேண்டாம் : பாஜகவிற்கு எதிராக நெட்டிசன்கள்
, சனி, 14 ஏப்ரல் 2018 (12:11 IST)
காஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து நாடெங்கும் பாஜகவிற்கு எதிராக மக்கள் திரும்பியுள்ளனர்.

 
ஜம்மு காஷ்மீ மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து சிலர் அவரை சீரழித்துள்ளனர். இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுல்ளனர். சமூக வலைத்தளங்களில் #JusticeforAsifa என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.
webdunia

 
இந்நிலையில், தேர்தலின் போது ஓட்டு கேட்க பாஜகவினர் வருவது போலவும், அப்போது, எங்கள் வீட்டில் பெண் குழந்தை இருக்கிறாள். எனவே, பாஜக, ஆர்.எஸ்.எஸ் காரர்கள்  யாரும் உள்ளே வரவேண்டாம்’ என்கிற வாசகம் அடங்கிய போஸ்டர்களை நெட்டிசன்கள் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
webdunia

 
குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இதை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழில் வாழ்த்து தெரிவித்த மோடி - வச்சு செய்த நெட்டிசன்கள்