தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் நேற்று தங்கம் விலை திடீரென குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை ஒரு கிராமுக்கு பத்து ரூபாயும் ஒரு சவரனுக்கு 80 ரூபாயும் குறைந்திருந்தாலும் இன்னும் ஒரு கிராம் 9 ஆயிரத்தை விட கீழே இறங்கவில்லை என்பதும் அதேபோல் ஒரு சவரன் 72 ஆயிரத்துக்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலையில் சரிவு இருந்தாலும் வெள்ளி விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும் கடந்த நான்கு நாட்களாக வெள்ளி விலை ஒரே நிலையில் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,015
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,005
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,120
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,040
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,834
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,823
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 78,672
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 78,584
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.111.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.111,000.00