Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

107 இடங்களில் முன்னிலை : ஆட்சி அமைக்கிறதா பாஜக?

Advertiesment
107 இடங்களில் முன்னிலை : ஆட்சி அமைக்கிறதா பாஜக?
, செவ்வாய், 15 மே 2018 (10:00 IST)
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து அதிக வித்தியாசத்தில் பாஜக முன்னிலையில் இருப்பதால் அந்த கட்சியே ஆட்சி அமைக்கும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

 
நடைபெற்று முடிந்த கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், தொடக்கம் முதலே பாஜக முன்னிலையில் வகித்து வந்தது. திடீரெனெ காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. ஒருகட்டத்தில் காங்கிரஸும், பாஜகவும் மாறி மாறி முன்னிலையில் இருந்தன.
 
தற்போதைய நிலவரப்படி பாஜக 107, காங்கிரஸ் 67, மஜத 45 இடங்களிலும், மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. 
 
தொடக்கத்தில் காங்கிரஸை விட சில இடங்கள் மட்டும் அதிகமாக பெற்று முன்னிலை வகித்து வந்த பாஜக, தற்போது 39 இடங்கள் அதிகமாக பெற்று முன்னிலையில் இருக்கிறது. 44 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் மஜத கட்சியின் ஆதரவு இருந்தால், பாஜகவே கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. 
 
இது காங்கிரஸ் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேவகவுடா கை காட்டுபவரே முதல்வர்: 33 தொகுதிகளில் முன்னிலை பெற்று அபாரம்