Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்நாடக தேர்தல் - 1 மணி நிலவரப்படி 36.8 சதவீதம் வாக்குப்பதிவு

Advertiesment
Karnataka assembly elections 2018
, சனி, 12 மே 2018 (14:21 IST)
கர்நாடகாவில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 1 மணி நிலவரப்படி 36.8 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளன.
கர்நாடகத்தில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 224 தொகுகளில், 222 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
 
ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கும், ஆர்.ஆர் நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டின் ஒன்றில் வாக்காளர் அடையாள அட்டை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாலும், இவ்விரு தொகுதிகளிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
webdunia
இத்தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே  போட்டி நிலவுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 55 ஆயிரத்து 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 
 
தேர்தலை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாநில போலீசார் உள்பட 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 
பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஷிகர்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவே கவுடா தன் மனைவியுடன் வந்து வாக்களித்தார். வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
webdunia

காலை 9 மணி நிலவரப்படி 10.6 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியானது. இதையடுத்து பகல் 1 மணி நிலவரப்படி 36.8 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

13 வயது சிறுவனுக்கு 23 வயது பெண்ணுடன் திருமணம்