Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம்! – வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ்!

Advertiesment
Uttar Pradesh
, செவ்வாய், 5 அக்டோபர் 2021 (08:43 IST)
உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மீது பாஜகவினர் கார் மோதிய விபத்து வீடியோவை காங்கிரஸ் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் மத்திய அமைச்சர் பயணித்த பகுதியில் பாஜகவினர் கார் மோதி விவசாயிகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்த கலவரம் உள்ளிட்டவற்றால் பத்திரிக்கையாளர் ஒருவர் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கலவரத்திற்கு பொறுப்பேற்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டுமென வலியுறுத்திய சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிய உத்தர பிரதேசம் வர சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர் வர முயற்சித்த நிலையில் அவர்கள் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாஜகவினரின் கார் வேகமாக வந்து போராட்டம் நடத்திய விவசாயிகளை மோதி தள்ளிய காட்சியை காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகம் முழுவதும் முடங்கிய வாட்ஸப், பேஸ்புக்! – மன்னிப்பு கேட்ட பேஸ்புக் நிறுவனம்!