Publish Date: Tue, 05 Oct 2021 (08:27 IST)
Updated Date: Tue, 05 Oct 2021 (08:30 IST)
உலகம் முழுவதும் நேற்று இரவு வாட்ஸப் உள்ளிட்ட செயலிகள் முடங்கிய நிலையில் இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
உலகம் முழுவதும் செல்போன் பயனாளர்கள் வாட்ஸப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென பேஸ்புக் நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் முடங்கியது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில் இன்று காலை இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம் “எங்கள் பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகளை அணுகுவதில் சிலருக்கு சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.