Publish Date: Mon, 04 Oct 2021 (16:10 IST)
Updated Date: Mon, 04 Oct 2021 (16:12 IST)
உயிரிழந்த விவசாயிகளை பார்கக் சென்ற பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங்குக்கு 144 உத்தரவு காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் மத்திய அமைச்சர் பயணித்த பகுதியில் பாஜகவினர் கார் மோதி விவசாயிகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்த கலவரம் உள்ளிட்டவற்றால் பத்திரிக்கையாளர் ஒருவர் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கலவரத்திற்கு பொறுப்பேற்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் லக்கிம்பூருக்கு சென்றார். ஆனால் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அவரின் ஹெலிகாப்டர் தரையிரங்க அனுமதி மறுக்கப்பட்டது.