கேரள உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூணாறு பஞ்சாயத்தில் பா.ஜ.க. போட்டியிடும் வேட்பாளர் பெயர் சோனியா காந்தி என்பது, உள்ளூர் அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இவரது தந்தை, மறைந்த துரை ராஜ், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர். முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீதான அபிமானத்தால் தனது மகளுக்கு அந்த பெயரை சூட்டியுள்ளார்.
ஆனால், திருமணத்திற்கு பிறகு இவரது அரசியல் நிலைப்பாடு மாறியது. இவரது கணவர் சுபாஷ், பா.ஜ.க-வின் தீவிர ஊழியர். கணவரின் வழியை பின்பற்றி, சோனியா காந்தி தற்போது பா.ஜ.க. ஆதரவு வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இவரது பெயர், காங்கிரஸ் வேட்பாளரான மஞ்சுளா ரமேஷுக்கு சவாலாக மாறியுள்ளது. ஏனெனில் காங்கிரஸ் பிரமுகரின் பெயரில் போட்டியிடுவது வாக்காளர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, வாக்குகளை பிரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
கேரள உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது.