Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு அமைய வேண்டும்: முன்னாள் முதல்வர் கருத்து

காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு அமைய வேண்டும்: முன்னாள் முதல்வர் கருத்து
, செவ்வாய், 19 நவம்பர் 2019 (09:48 IST)
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சிவசேனாவுக்கு ஆதரவளிப்பதற்கு பதிலாக பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க வேண்டும் என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா இடையேயான கூட்டணி முறிந்துள்ள நிலையில், மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்ற கேள்விக்கு இன்னும் முடிவு கிடைக்கவில்லை. தற்போது குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கும் மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெற சிவசேனா தீவிரமாக முயற்சித்து வருகிறது. ஆனால் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியா காந்தி தயங்குவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் இன்னும் மகாராஷ்டிராவில் குழப்ப அரசியலே நீட்டித்து வருகிறது
 
webdunia
இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, ’இந்துத்துவ கொள்கைகளில் தீவிரமான போக்கைக்கொண்ட சிவசேனாவுக்கு ஆதரவளிப்பதைவிட, இந்துத்துவ கொள்கையில் மென்மையான போக்கை கடைப்பிடிக்கும் பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி தன்னுடைய ஆதரவை வழங்கலாம் என்றும் காங்கிரஸ்-பாஜக கூட்டணி மகாராஷ்டிராவில் அமைய வேண்டும் என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.
 
ஆனால் தமிழகத்தில் எப்படி அதிமுக-திமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடியாதோ அதேபோல் மகாராஷ்டிரா உள்பட எந்த மாநிலத்திலும் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமைவது சாத்தியமில்லை என்றே கூறப்பட்டு வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சபரிமலை கலெக்‌ஷன் இத்தனை கோடியா??