Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரியங்கா காந்தியிடம் ரூ.52,000 பணம் மட்டுமே உள்ளது.. பிரமாண பத்திரத்தில் தகவல்..!

Advertiesment
Priyanka Gandhi

Siva

, வியாழன், 24 அக்டோபர் 2024 (07:24 IST)
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த வேட்புமனுவுடன் இணைக்கப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் அவர் சொத்து விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பிரியங்கா காந்தியின் கையில் உள்ள ரொக்கப்பணம் ரூ.52 ஆயிரம். 2024 செப்டம்பர் 30 நிலவரப்படி, டெல்லி எச்டிஎப்சி வங்கியில் ரூ.2.80 லட்சம், டெல்லி யுசிஓ வங்கியில் ரூ.80,399, கேரளாவில் உள்ள கனரா வங்கியில் ரூ.5,929 சேமிப்பாக உள்ளன.

மேலும், மியூச்சுவல் பண்ட்களில் ரூ.2.24 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் சொந்தமாக ஹோண்டா சிஆர்வி கார் வைத்திருப்பதாகவும், இந்த காரை 2004ஆம் ஆண்டு அவரது கணவர் ராபர்ட் வதேரா பரிசாக வழங்கியதாகவும், அதன் மதிப்பு ரூ.8 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா காந்தியிடம் ரூ.1.15 கோடி மதிப்பிலான தங்க நகைகள், மேலும் 59.83 கிலோ வெள்ளி பொருட்கள் ரூ.29.55 லட்சம் மதிப்பில் உள்ளன. மொத்தமாக, அவர் வைத்திருக்கும் அசையும் சொத்து ரூ.4.24 கோடியாகும்.

அவரது கணவர் ராபர்ட் வதேராவிடம் மொத்தமாக ரூ.37.91 கோடி மதிப்பில் அசையும் சொத்துகள் உள்ளன. அசையா சொத்துகளின் அடிப்படையில், பிரியங்கா காந்தியிடம் ரூ.7.74 கோடி, ராபர்ட் வதேராவிடம் ரூ.27.64 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தம், பிரியங்கா காந்தியிடம் சுமார் ரூ.12 கோடி மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளதாகப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!