கன்னியாகுமரி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென என்ஜின் மட்டும் தனியாக பிரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 9 மணியளவில் காட்பாடி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயில் என்ஜின் மட்டும் தனியாக பிரிந்தது. என்ஜின் மற்றும் ரயில் பெட்டிக்கு இடையிலான கப்ளிங் திடீரென பிரிந்தது. இதனால் ரயில் என்ஜின் மட்டும் தனியாக சென்று விட்டது.
எனவே பயணிகள் இருந்த ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் நின்றன. பிரிந்து சென்ற என்ஜினை மீண்டும் பின்னோக்கி கொண்டு வர ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஒரு மணி நேரத்துக்கு மேல் ரயில் பெட்டிகள் மட்டும் தனியாக நிற்கும் நிலையில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ரயில் என்ஜின் மட்டும் தனியாக சென்றதைக் கண்ட பயணிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.