Publish Date: Tue, 12 Apr 2022 (17:37 IST)
Updated Date: Tue, 12 Apr 2022 (17:38 IST)
பீகார் முதலமைச்சர் கலந்து கொண்ட மேடை அருகே திடீரென குண்டு வெடித்ததை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட பின்னர் மேடை அருகே திடீரென 15 முதல் 18 அடி தூரத்தில் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்ததில் குண்டு வீச்சு தொடர்பாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
முதலமைச்சர் கலந்து கொண்ட மேடை அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது