பெங்களூரில் நிலநடுக்கமா? வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி

வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (19:58 IST)
கர்நாடக தலைநகர் பெங்களூரில் சற்றுமுன் பயங்கர சத்தம் கேட்டதாகவும், அதன் காரணமாக பெங்களூரின் ஒருசில பகுதிகளில் வீடுகள் அதிர்ந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இந்த சத்தம் கேட்டு பெங்களூரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்களிடையே வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து பெங்களூர் மக்கள் கூறியபோது, சற்றுமுன்னர் பயங்கர சத்தம் கேட்டதாகவும், வீடுகளின் ஜன்னல்கள் ஆடியதாகவும், மேஜைகள் நகர்ந்ததாகவும் பீதியுடன் தெரிவித்தனர்.
 
ஆனால் இதுகுறித்து புவியியல் நிபுணர்கள் கூறியபோது, 'பெங்களூரின் நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான பதிவு இல்லை என்று கூறினர். இதனால் சத்தம் மற்றும் அதிர்வு எதனால் ஏற்பட்டது என்பதற்கான காரணம் தெரியாமல் மக்கள் குழப்பத்துடன் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பிரதமராக சாதனை படைத்த அடல் பிகாரி வாஜ்பாய்