Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முக்கிய குற்றவாளியை துரத்திப் பிடித்த போலீஸ்காரருக்கு பலே பரிசு

Advertiesment
முக்கிய குற்றவாளியை துரத்திப் பிடித்த போலீஸ்காரருக்கு பலே பரிசு
, சனி, 7 ஜூலை 2018 (13:40 IST)
பெங்களூருவில் போலீஸ்காரர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு கொள்ளையனை பிடித்ததால், அவருக்கு வித்தியாசமான பரிசை உயரதிகாரிகள் கொடுத்துள்ளனர்.
நாட்டில் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொள்ளையர்கள் அசால்ட்டாக திருடிச் செல்கின்றனர்.
 
இந்நிலையில் பெங்களூர் பெல்லாந்தூர் பகுதியின் காவலரான வெங்கடேஷ்(30), தனது இரு சக்கர வாகனத்தில் இரவு ரோந்து பணிக்கு சென்றார். சர்ஜாபூர் மெயின்ரோட்டின் அருகே சென்றபோது, திருடன் திருடன் என சத்தம் கேட்கவே, பைக்கில் தப்பியோடிய கொள்ளையனை துரத்திச் சென்றார் வெங்கடேஷ்.
 
சுமார் 5 கிலோமீட்டர் கொள்ளையர்களை துரத்திச் சென்ற வெங்கடேஷ், கொள்ளையர்களின் வண்டியை, தன் இரு சக்கர வாகனத்தால் மோதினார். கொள்ளையர்களின் வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததும் இரு கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர். அதில் அருந்தயாள் என்ற ஒருவனை மட்டும் வெங்கடேஷ் கைது செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
webdunia
அருந்தயாள் மீது ஏராளமான கொள்ளை புகார்கள் இருக்கிறது. போலீஸார் கண்களில் விரலைவிட்டு ஆட்டி வந்த அருந்தயாளை, கஷ்டப்பட்டு பிடித்துத் தந்த வெங்கடேஷுக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
 
மேலும் புதுமாப்பிள்ளையான வெங்கடேஷுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகையும் விடுமுறையோடு தேனிலவுக்கு கேரளா சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை சந்தோஷமாக ஏற்றுக்கொண்ட வெங்கடேஷ் தற்பொழுது கேரளாவிற்கு தேனிலவு சென்றுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரயில் பயணம் செய்ய ஒரிஜினல் அடையாள அட்டை தேவையில்லை...