Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒத்த லட்டுக்கு கொட்டுது துட்டு: திருப்பதியின் ஒரு நாள் உண்டியல் கலெக்‌ஷன் இவ்வளவா?

Advertiesment
National News
, சனி, 29 ஜூன் 2019 (20:35 IST)
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இந்த வார விடுமுறையில் படையெடுத்த கூட்டத்தால் திருப்பதியே திணறிப் போய்விட்டது. நேற்று மட்டும் சுமார் 71 ஆயிரத்து சொச்சம் பேர் சுவாமி தரிசனம் செய்திருக்க, காத்திருப்போர் பட்டியலில் லட்சகணக்கில் மக்கள் இருக்கிறார்கள்.

நாளுக்கு நாள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய கூட்டம் கூட்டமாக மக்கள் வருவது அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் நேற்று ஏழுமலையானுக்கு ஸ்மார்த்த ஏகாதசி என்பதால் ஆயிரக்கணக்கில் கூட்டம் குவிந்தது. இந்த நாளில் ஏழுமலையானை வழிபடுவதால் வீட்டில் செல்வம் பெருகும். இன்று வைஷ்ணவ ஏகாதசி என்பதால் வெங்கடாஜலபதிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இந்த இரண்டு நாளையும் தவறவிட்டுவிட கூடாது என பக்தர்கள் பாலாஜியை பார்க்க படையெடுத்துள்ளனர். இலவச தரிசனத்திற்காக காத்திருப்போருக்கான 32 அறைகளும் நிரம்பிவிட்ட நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் மடங்களில் தங்கியுள்ளனர். நேற்று ஒருநாள் உண்டியல் வசூல் மட்டுமே 4 கோடி 35 லட்சம் கிடைத்துள்ளதாம். இன்று முக்கியமான நாள் என்பதால் இன்றைய வசூல் நேற்றைய வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மருத்துவமனையில் அனுமதி !